நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகளின் நினைவூட்டல்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த கலை இலக்கியப் பணிக்கான விருதினை கலை இலக்கியத்துமைக்கு சிறப்பான சேவையாற்றி வருகின்ற "கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதுமும் சன்றிதழும்

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதப் போட்டி 13.06.2010 சங்க மண்டபத்தில் நடைபெற்றது. கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி, கொழும்பு றோயல் கல்லூரி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலனை, நீர் கொழும்பு விஜெயரத்தினம் மத்திய இகல்லூரி, பரி, தோமாவின் கல்லூரி கல்கிசை, கொழும்பு புனித பேதுரு கல்லூரி, கொழும்பு பத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி,கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி, ஆகிய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்

25.04.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தலைவர் உரையாற்றுவதையும் நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் திரு.வி.கைலாயபிள்ளை அவர்கள் முதல்பிரதியை பெறுவதையும் நூல் வெளியீட்டால் பெறப்பட்ட நிதி போரினாலும் சுனாமியாலும் தாய், தந்தையரை இழந்து இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியினால் பராமரிக்கப்படும் மாணவச் செல்வங்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக வழங்கப்படும் இதற்கான சான்றிதழை திரு.எஸ்.பாஸ்க்கரா பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்குவதையும் படத்தில் கணலாம். பேராசிரியர் சபா ஜெயராசா மங்கல விளக்கேற்றுவதையும் படத்தில் காணலாம்.

 
வாராந்த நிகழ்வுகள்
அறிவோர் ஒன்று கூடல்- புதன்கிழமை ( மாலை 6.00 மணி )

படித்ததும் பிடித்ததும் - வெள்ளிக்கிழமை ( மாலை 6.00 மணி )

சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் - சனிக்கிழமை ( காலை 10.00 மணி )
மாதாந்த நிகழ்வுகள்
முழுமதி தினம் - மாதாந்த இசை நிகழ்ச்சி ( மாலை 6.00 மணி )

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை - அற்றைத்திங்கள் ( மாலை 6.00 மணி )

மாதம் ஒருமுறை -ஆரோக்கிய வாழ்வுக் கலந்துரையாடல் ( காலை 9.00 மணி - 12.00 மணிவரை )
மாதமிருமுறை நிகழ்வுகள்
1ஆம், 3ஆம் திங்கட்கிழமை- பி.ப 3.00 மணி - 5.30 மணிவரை இலவச மருத்துவப் பரிசோதனையும் இலவச மருந்து வழங்கலும் வைத்தியகலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம்
மேலும்...