 |
 |
தலை நகராம் கொழும்பில் 1942 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ்மொழிக்குத் தொண்டாற்றும் நிறுவனம், கொழும்புத் தமிழ்ச்சங்கம். தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும் செழுமையையும் இலக்குகளாகக் கொண்டு இதன் பணிகள் அமைந்துள்ளன.
உயர்நிலை ஆய்வு, உசாத்துணை உட்பட தேவைகள் பலவற்றைப் பூர்த்தி செய்வதாயும், தமிழ்மொழியிலான வாசிப்பின் தளத்தை விரிவுபடுத்துவதாயும் சங்கத்தின் நூலகம், தனித்துவமானதாகத் திகழ்கிறது. பெரும் எண்ணிக்கையிலான தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்நூலகம், இடையறாது தன்னைப் புதுக்கிக் கொள்கிறது. |
|
படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள் என்போருக்கும் களம் அமைத்துக் கொடுத்தல், மாணவரின் ஆக்கத்திறனை வளர்த்தெடுத்தல், இலக்கிய ஆர்வலர்களின் இரசனையை மேம்படுத்தல், “ஓலை” சஞ்சிகை வெளியீடு, நூல்பிரசுரம் என சங்கத்தின் இலக்கியப்பணிகள் பன்முகப்பட்டன. |
| |
 |
 |
சேவை அர்ப்பணிப்பாளரின் ஒருமித்த உழைப்பை உள்வாங்கித், தமிழ்ப் பண்பாட்டின், பன்முகப்பாட்டிற்கு மதிப்பளித்து, அவை ஒவ்வொன்றினதும் வளர்ச்சிக்கும் விஞ்ஞான தொழில் நுட்ப விருத்திக்கும் அத்துடன், தமிழாய்வுக்கும் ஊக்கமளித்து, ஏனைய கல்விப்புல நிலையங்களின் தகவல் பரிமாற்ற நிறுவனமாகக் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி தமிழ்மொழியின் செழுமையையும்; வளர்ச்சியை ஊக்குவித்தல். |
| |
|
|
| |
| A/L exam paper tamil part I , Part II, Marking Scheme
|
| |
|
|
|