வரவேற்கிறோம்

தலை நகராம் கொழும்பில் 1942 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ்மொழிக்குத் தொண்டாற்றும் நிறுவனம், கொழும்புத் தமிழ்ச்சங்கம். தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும் செழுமையையும் இலக்குகளாகக் கொண்டு இதன் பணிகள் அமைந்துள்ளன.

உயர்நிலை ஆய்வு, உசாத்துணை உட்பட தேவைகள் பலவற்றைப் பூர்த்தி செய்வதாயும், தமிழ்மொழியிலான வாசிப்பின் தளத்தை விரிவுபடுத்துவதாயும் சங்கத்தின் நூலகம், தனித்துவமானதாகத் திகழ்கிறது. பெரும் எண்ணிக்கையிலான தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்நூலகம், இடையறாது தன்னைப் புதுக்கிக் கொள்கிறது.

படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள் என்போருக்கும் களம் அமைத்துக் கொடுத்தல், மாணவரின் ஆக்கத்திறனை வளர்த்தெடுத்தல், இலக்கிய ஆர்வலர்களின் இரசனையை மேம்படுத்தல், “ஓலை” சஞ்சிகை வெளியீடு, நூல்பிரசுரம் என சங்கத்தின் இலக்கியப்பணிகள் பன்முகப்பட்டன.

 

கொழும்புத் தமிழ்ச்சங்கம் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

thai_p1