தலை நகராம் கொழும்பில் 1942 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ்மொழிக்குத் தொண்டாற்றும் நிறுவனம், கொழும்புத் தமிழ்ச்சங்கம். தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும் செழுமையையும் இலக்குகளாகக் கொண்டு இதன் பணிகள் அமைந்துள்ளன.

உயர்நிலை ஆய்வு, உசாத்துணை உட்பட தேவைகள் பலவற்றைப் பூர்த்தி செய்வதாயும், தமிழ்மொழியிலான வாசிப்பின் தளத்தை விரிவுபடுத்துவதாயும் சங்கத்தின் நூலகம், தனித்துவமானதாகத் திகழ்கிறது. பெரும் எண்ணிக்கையிலான தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்நூலகம், இடையறாது தன்னைப் புதுக்கிக் கொள்கிறது. படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள் என்போருக்கும் களம் அமைத்துக் கொடுத்தல், மாணவரின் ஆக்கத்திறனை வளர்த்தெடுத்தல், இலக்கிய ஆர்வலர்களின் இரசனையை மேம்படுத்தல், “ஓலை” சஞ்சிகை வெளியீடு, நூல்பிரசுரம் என சங்கத்தின் இலக்கியப்பணிகள் பன்முகப்பட்டன.

 

தமிழ்ச்சங்க குழுக்களின் விபரம்:

 

1) இலக்கியக்குழு

 

2) கல்விக்குழு

 

3) நூலகக்குழு

 

4) உறுப்புரிமைக்குழு

 

5) நிலையமைப்புக்குழு

 

6) பரிசில்நிதியக்குழு

 

7) பதிப்புத்துறை விற்பனைக்குழு

 

8) நிதிமதியுரைக்குழு

நூலகம்

ஏறக்குறைய 45 ஆயிரம் தமிழ் நூல்களைக் கொண்டு கொழும்பு மாநகரில் முதற்தரமான தன்னகத்தே நூலகமாக பயன்தரு பல தொன்மையான மிக்க நூல்களை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இலங்கை எழுத்தாளர் பிரிவு, சிறுவர்களுக்கான பிரிவு கணினிப் பிரிவு, ஆய்வு மேற்கொள்வதற்கான தனியான பிரிவு என வடிவமைக்கப்பட்டுள்ளது. நூற்றிற்கு மேற்பட்ட சஞ்சிகைகள், வெளியீடுகள்;, பருவப்படைப்புகள் எனப் பல்வேறுபட்ட வெளியீடுகள் வாசகர்களின் பயன் பாட்டிற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.



நூல்கள் விற்பனை நிலையம்

இந் நாட்டில்வெளியாகும் நூல்களும், இலங்கை எழுத்தாளர்களின் புதுப்புது ஆக்கங்களும் மொத்த மாகவும் சில்லறையாகவும் இந்நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

“ஓலை”

ஓலை எனும் மாதாந்தச் சஞ்சிகை சங்கத்தின் செய்திகளுடன் பல இலக்கியப்படைப்புக்காயும் தன்னகத்தே கொண்டுள்ளது. வெளி நாட்டில் வாழும் இலங்கையர்களின் பெரும் ஆவலுடன் பெற்றுப் பயன் பெற்று வருகின்றன. இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சந்தா விபரம்

இலங்கை : தனிப்பிரதி 100 ரூபா
ஒருவருடம் 1000 ரூபா
இந்தியா ஒருவருடம் 600 ரூபா
கடல் கடந்த நாடுகள் 30 அமெரிக்க டொலர்

ஓலை இதழின் விரிவாக்கத்திற்கு உதவ விரும்புவோர் தங்கள் அன்பளிப்புக்களைக் காசோலை அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society Ltd எனும் நிறுவனத்தின் கணக்கு இல. 1100014906 Commercil Bank வெள்ளவத்தைக்கிளைக்கு அனுப்பிவைக்கலாம்

படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள் என்போருக்கும் களம் அமைத்துக் கொடுத்தல், மாணவரின் ஆக்கத்திறனை வளர்த்தெடுத்தல், இலக்கிய ஆர்வலர்களின் இரசனையை மேம்படுத்தல், “ஓலை” சஞ்சிகை வெளியீடு, நூல்பிரசுரம் என சங்கத்தின் இலக்கியப்பணிகள் பன்முகப்பட்டன.

 
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின்ஆட்சிக்குழு - (2009-2010)
 
வாராந்த நிகழ்வுகள்
அறிவோர் ஒன்று கூடல்- புதன்கிழமை ( மாலை 6.00 மணி )

படித்ததும் பிடித்ததும் - வெள்ளிக்கிழமை ( மாலை 6.00 மணி )

சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் - சனிக்கிழமை ( காலை 10.00 மணி )
மாதாந்த நிகழ்வுகள்
முழுமதி தினம் - மாதாந்த இசை நிகழ்ச்சி ( மாலை 6.00 மணி )

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை - அற்றைத்திங்கள் ( மாலை 6.00 மணி )

மாதம் ஒருமுறை -ஆரோக்கிய வாழ்வுக் கலந்துரையாடல் ( காலை 9.00 மணி - 12.00 மணிவரை )
மாதமிருமுறை நிகழ்வுகள்
1ஆம், 3ஆம் திங்கட்கிழமை- பி.ப 3.00 மணி - 5.30 மணிவரை இலவச மருத்துவப் பரிசோதனையும் இலவச மருந்து வழங்கலும் வைத்தியகலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம்
மேலும்...